பிரான்சில் சேவல் கூவியதால் வழக்குப் பதிவு !!

பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான ஒலெரானில் வாழும் ஓய்வு பெற்ற தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேவலின் சொந்தக்காரர் கொரீன் ஃபெசெள எல்லா சேவல்களும் என்ன செய்யுமோ அதை தான் தன்னுடைய சேவலும் செய்வதாக கூறியுள்ளார்.

மோரிஸோ அல்லது அதன் மீது குற்றம் கூறியவர்களோ வியாழக்கிழமை மேற்படியான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்திற்கு வரவில்லை.

ஆனால் சமீபத்தில் உள்ளூரில் பிரபலமடைந்த சேவலின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்தார்கள்.

அவர்களும் சேவல் வைத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டியவர்களான ஜீன் லூயிஸ் பிரொன் மற்றும் ஜோலி அண்ட்ரியாக்ஸ் 15 வருடங்களுக்கு முன்பு சன்பியரிட் ஒரெலான் என்னும் கிராமத்தில் தங்கள் விடுமுறை தினங்களுக்கான இடத்தை கட்டினார்கள்.

பின்னர் அது அவர்களின் ஒய்வு தினங்களுக்கான வீடாக மாறியது. இந்த கிராமத்தை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமே இங்குள்ள அமைதிதான்.

ஆனால் மோரிஸின் இந்த சத்தம் 2017 ல் தொடங்கியது. அந்த பகுதியில் 35 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஃபெஸெள தாங்கள் சொல்வதைக் கேட்காமல் இருந்ததே இந்த பிரச்சனை பெரிதானதற்கு காரணம் என்கின்றனர்.

ஃபெஸெளவும் அவரின் ஆதரவாளர்களும் சேவல் கூவுவது என்பது கிராமத்து வாழ்க்கையில் ஒன்று.

அதை நிறுத்த வேண்டும் என்பது காரணமற்ற கோரிக்கையாகும் என கூறுகின்றனர்.

மோரிஸை என்ன செய்யவேண்டும் என்பதை இனி செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் வரவிருக்கும் தீர்ப்பே முடிவு செய்யும்.


Recommended For You

About the Author: Editor