மீ டூ புகாரளித்த காயத்ரி!!

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 4ஜி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் காயத்ரி சுரேஷ்.

மலையாளத் திரையுலகில் பிஸியாக நடித்துவரும் காயத்ரி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.

காய்த்ரி சுரேஷ் தற்போது சில்ட்ரன்ஸ் பார்க் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்தவகையில் கதாநாயகன் துருவனுடன் இணைந்து ரெட் எஃப்எம்-க்கு அளித்த பேட்டியில், “எனக்கு சில தயாரிப்பாளர்கள் மெசேஜ்கள் அனுப்பினர்.

நீங்கள் அதற்கு தயாரா..?” என்று கேட்டபடி இருந்தனர். இதுபோன்ற மெசேஜ்களுக்கு நான் பதிலளிப்பதில்லை” என்று கூறினார்.

அதற்கு துருவனும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஏன் நீங்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. ஆக்ரோஷமாக அதற்கு ஏற்ப நீங்கள் பதிலளித்திருக்கலாமே என்று கேட்டனர். அதற்கு காயத்ரி, “அதற்கு பதிலளிக்காமல் கடந்து போவதே சிறந்த பதிலாக இருக்க முடியும்.

அவர்கள் என்னைப் பற்றி புரிந்துகொண்டு விலகிச் சென்றனர்” என்று கூறியுள்ளார்.

மீடூ இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக வுமன்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor