பார்ட்டி மூடில் காதல் சைக்கோ!

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் தோன்றும் சாஹோ படத்தின் காதல் சைக்கோ பாடலின் டீசர் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

பாகுபலியைத் தொடர்ந்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சாஹோ படம், பாகுபலியை போலவே பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின் தரத்திற்கு இணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்திற்கான புரொமோஷனையும் தொடங்கியுள்ளது படக்குழு.

ஜூலை 8ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடலான காதல் சைக்கோவிற்கு முன்னோட்டமாக அப்பாடலின் முப்பது நிமிட டீசர் இன்று காலை வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்பாடலில் ஷ்ரத்தா கபூர் பிரபாஸை காதல் சைக்கோ என்ற வரிகளில் அழைக்கிறார்.

‘பப்’புக்குள் அரங்கேறும் பாடலின் நடனம், இசை நன்றாக அமைந்துள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள பாடலுக்கு த்வனி குரல் கொடுத்துள்ளார். பாடலுக்கு நடனம் ராஜு சுந்தரம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

சுஜித் இயக்கியுள்ள படத்தில் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனிஷ்க் பக்ஷி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மதி, படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், கலை சாபு சிரில் என முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்


Recommended For You

About the Author: Editor