உடலுக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை சாதம் செய்யும் முறை இதோ

குழந்தைகளின் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் எடுத்து செல்லும் ஒரு உணவு இந்த எலுமிச்சை சாதம். இதனை தயார் செய்ய மிக குறைந்த நேரமே பிடிக்கும். எனவே இதனை அடிக்கடி வீட்டில் செய்வார்கள். இந்த பதிவில் எலுமிச்சை சாதம் செய்வதை பற்றி பார்ப்போம் வாருங்கள். எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – சிறிதளவு கடலை பருப்பு – 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலை – சிறிதளவு காய்ந்தமிளகாய் – 3 பச்சைமிளகாய் – 3 கருவேப்பிலை – சிறிதளவு மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிதளவு எலுமிச்சை பழம் – 2 உப்பு – தேவையான அளவு சாதம் – 2 கப்

எலுமிச்சை சாதம் செய்முறை: முதலில் ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வருத்ததும் அதனுடன் கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அடுப்பினை அனைத்து விடுங்கள். பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு இதனுடன் நாம் சமைத்து வைத்துள்ள சாதம் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்


Recommended For You

About the Author: Editor