யாழில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியல்

ஹெரோயின் வைத்திருந்த குடும்பப் பெண்ணுக்கு விளக்கமறியல் – மல்லாகம் நீதிவான் உத்தரவு

8 கிராம் 400 மில்லிக்கிராம் ஹொரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பப் பெண்ணை ஜூலை 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயிர்க்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடம் என உடுவில் மல்வம் பகுதியிலுள்ள வீடு ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 8 கிராம் 400 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதனை விற்பனை செய்யும் நோக்குடன் பதுக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அங்கு வசிக்கும் குடும்பப் பெண் கைது செய்யப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரது கணவர் ஹெரோயின் விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

குடும்பப் பெண் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அவரை வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, 8 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடமையில் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்