போதையில் சாரத்தியம் – 25 ஆயிரம் தண்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்கு 5 சாரதிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

அவர்களில் ஒருவர் சாரதி அனுமதிப்பத்திரமின்றி சாரத்தியம் செய்த குற்றத்துக்கு மேலும் 25 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தினார்.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி மற்றும் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றத்து யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகூடிய தண்டப் பணமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஐவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுக்களை ஐவரும் ஏற்றுக்கொண்டனர்.

அவர்களில் கோப்பாய் பொலிஸாரால் முற்படுத்தப்பட்ட சாரதிக்க மதுபோதையில் சாரத்தியம் செய்ததைக்கு 25 ஆயிரம் ரூபாவும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி 25 ரூபாவும் மொத்தம் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

மற்றொருவருக்கு மதுபோதையில் சாரதியம் செய்தமைக்கு 25 ஆயிரம் ரூபாவும் உரிய ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியமைக்கு 12 ஆயிரத்து 500 ரூபாவும் மொத்தமாக 37 ஆயிரத்து 500 ரூபாவும் தண்டம் விதித்து மன்று உத்தரவிட்டது.

ஏனைய மூவரும் மதுபோதையில் சாரதியம் செய்த குற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், 5 பேரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்திவைக்க நீதிமன்று உத்தரவிட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்