வவுனியாவில் முஸ்ஸிம்கள் போராட்டம்!!

வவுனியா – சூடுவெந்தபுலவு, பழைய குடிமனை பகுதியில் முஸ்ஸிம் சமூகத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்று மதியம் தொழுகை முடிந்த பின்னர் இப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

முஸ்ஸிம் சமூகத்தினர் தமது காணிகளைப் பெறுவதற்கு உரிய தீர்வு வேண்டும் என கோரி இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இது எங்களது பூர்வீக பூமி, 1940ஆம்,1960ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட உறுதிகள் எம்மிடம் உண்டு, இது பாரம்பரியமாக பராமரிக்கப்படும் விவசாயப் பூமி, எமது பூர்வீக நிலங்ளை அபரிக்க துடிக்கம் வனவள திணைக்களமே, அரசே எமது வருமானத்தை பறித்து சொத்தை அழித்து எம்மை கொல்லாதே, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரசேகர மற்றும் சூடுவெந்தபுலவு கிராம சேவையாளர் ஜெயபாலன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை சூடுவெந்தபுலவு கிராம சேவையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor