காதலை ஓப்பனாக சொன்ன கவின்

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருவதை போல் இந்த மூன்றாம் பாகத்திலும் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

அதுதான் கவின் – சாக்சி ஜோடி. முதலில் கவினை அபிராமி காதலித்தார்.

ஆனால் கவினோ லாஸ்லியாவை கரெக்ட் செய்ய முயன்றார். தற்போது கவினின் மனதில் சாக்சி குடிவந்துவிட்டது போல் தெரிகிறது.

என்னோட ட்ரீம்பாய் நீதான் என சாக்சி கூற, நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கிட்ட இருக்க வேண்டிய தகுதி எல்லாம் உன்கிட்ட இருக்குன்னு கவின் சொல்ல இன்றைய புரமோ ஒரே காதல்மயமாக இருந்தது

ஆனால் கவின் – சாக்சி காதல் சக்சஸ் அடைய மற்ற மூன்று பெண்களும் விடுவார்களா? என்பதுதான் தற்போதைய கேள்வி.

குறிப்பாக இந்த காதல் ஜோடியை பிரிக்க அபிராமி என்ன செய்வார்? என்ற எதிர்பார்ப்பே அதிகமாகிறது.

இப்போதைக்கு கவின் – சாக்சி தான் காதல் ஜோடி என்று சொல்லி வைப்போம், பின்னர் பார்த்து கொள்ளலாம் என்பது கூட பிக்பாஸ் குழுவினர்களின் முடிவாக இருக்கலாம்.

Embedded video

Vijay Television

@vijaytelevision

மனசுக்குள்ளே காதல் வந்துச்சா?? 😍😍#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3


Recommended For You

About the Author: Editor