சமுத்திரக்கனியின் படம் ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குனர் மற்றும் குணசித்திர நடிகர் சமுத்திரக்கனி நடித்த ‘கென்னடி கிளப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’, சில்லுக்கருப்பட்டி’, ‘அடுத்த சாட்டை’, ‘வெள்ளைய் யானை’, உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் தனராம் சரவணன் இயக்கிய ‘கொளஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 19 ரிலீஸ் என அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் படகுழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்த மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor