சிரியா நோக்கிப்பயணித்த எண்ணெய்க் கப்பல் சிறைபிடிப்பு!

சிரியா நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்ட ஜிப்ரால்டர் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடற்படையினரின் உதவியுடன் ஜிப்ரால்டர் மாகாண பொலிஸார் குறித்த கப்பலினை சிறைபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஜிப்ரால்டர் பொலிஸ் உயர் அதிகாரி, ஃபேபியன் பிகார்டோ,

‘சிரியாவிலுள்ள பன்யாஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு வழங்குவதற்காக மசகு எண்ணெய் ஏற்றி வந்த கிரேஸ் 1 கப்பல் நேற்று(வியாழக்கிழமை) சிறைப்பிடிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட சிரியா நிறுவனங்களில் அந்த சுத்திகரிப்பு ஆலையும் அடங்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

சிரியாவினைச் சேர்ந்த மக்கள் மீது அல்-அஷாத் தலைமையிலான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சுமத்திவரும் ஐரோப்பிய ஒன்றியம், சிரியா மீது விதித்த பொருளாதாரத் தடை, 2011ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor