கேப்பாப்புலவில் குண்டு வெடித்ததில் மக்கள் பதற்றம்!!

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு இராணுவ படை பிரிவின் அருகாமையிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) நிகழ்ந்துள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு சத்தம், கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் இந்த குண்டுச் சத்தம், நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து, அங்கு தீ வைத்த வேளையிலே இடம்பெற்றுள்ளது.

மேலும் குண்டு வெடித்த இடத்தில் 8 ஆளமான குழிகள் தோன்றப்பட்டு காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவம் ஆகியோர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் இந்த இடம் நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor