பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஆரம்பம்

மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள்,இன்று (ஜூலை 5) வெள்ளிக்கிழமை முற்பகல் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் பலாலி விமான அபிவிருத்திப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் 9.45 மணியளவில் பலாலி ஓடுபாதையில் ஆரம்பமானது.

19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படும்.
விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, A320, A321 போன்ற பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்