நயன்தாரா படத்தில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா!

சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘சயிர நரசிம்மரெட்டி’ படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் ஜான்சிராணி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவை ஆட்சி செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட ஜான்சி ராணியின் வீரம் உலகம் அறிந்ததே.

இந்த கேரக்டர் ‘சயிர நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஒரு முக்கிய பகுதியாக வருவதாகவும் இந்த கேரக்டரில் தான் அனுஷ்கா நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் ஜான்சிராணி தலைமையில் கடந்த 1857ஆம் ஆண்டு நடந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த இந்திய கிளர்ச்சி போர் குறித்த காட்சிகளும் உள்ளதாம்.

இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப் உள்பட பல இந்திய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அமித் திரிவேதி இசையில் ரத்னவேலு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் ராம்சரண் தேஜா இயக்கி வரும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார்.

இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor