அரசு அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையை ஆய்வு செய்ய சென்ற அரசு அதிகாரி மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே சகதியை ஊற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கன்காவ்லில் பகுதியில் உள்ள பாலம் அருகே மும்பை-கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் இன்ஜினியர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நிதிஷ் ரானேவின் ஆதரவாளர்கள் அவருடன் மோதல் போக்கை மேற்கொண்டனர்.

திடீரென அவர்கள் அங்கே ஏற்கனவே பக்கெட்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த சகதி நீரை எடுத்து வந்து அரசு அதிகாரி மீது ஊற்றினர்.

மேலும், அவரை பாலத்தில் கட்டிவைக்கவும் முயற்சி செய்தள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திர் நாராயண் ரானேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் வர்கியாவின் மகனும், அதே கட்சியின் எம்.எல்.ஏ.வுமான விஜய் வர்கியாவும் தாக்கிய விவகாரம் சமீபத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.


Recommended For You

About the Author: Editor