கடைசி வரை ஆட்டம் காட்டிய ஆப்கன்..

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை லீக் சுற்றில் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் மோதின.

AFG vs WI Cricket World cup 2019 : Afghanistan vs West Indies match result and highlights

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நீண்ட நேரம் ஆட்டம் காட்டி, பேட்டிங்கில் இடையே பெரிய சொதப்பல் செய்து தோல்வி அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு ஆடியது அந்த அணி.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிறிஸ் கெயிலை 7 ரன்களில் இழந்தது.

அதன் பின் வந்த அத்தனை பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக ஆடினார்கள். லீவிஸ் 58, ஷாய் ஹோப் 77, ஹெட்மயர் 39, பூரன் 58, ஹோல்டர் 45 ரன்கள் சேர்த்தனர்.

40 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 311 ரன்கள் எடுத்து அசத்தியது.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் கொடுத்தனர்.

வேகப் பந்துவீச்சாளர்கள் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினர். ஆப்கன் அணி சவாலான இலக்கை நோக்கி சேஸிங் செய்தது.

அந்த அணிக்கு குலாப்தின் நயிப் 5 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து ரஹ்மத் ஷா 62, இக்ரம் 86, நஜிபுல்லா 31, அஸ்கார் ஆப்கன் 40 ரன்கள் என ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

எனினும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் 40 ஓவர்களுக்குப் பின் வரிசையாக ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், ஆப்கன் அணி 2 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆட்டம் காட்டியது. 49வது ஓவரில் தான் அந்த அணி தோல்வி அடையும் என்பது உறுதியானது.

50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது ஆப்கானிஸ்தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் உலகக்கோப்பை தொடரை முடித்துக் கொண்டது.


Recommended For You

About the Author: Editor