நீராவியடி பிள்ளையாருக்கு பொங்கல் – போக்குவரத்து ஏற்பாடுகளின் விபரம்.

நீராவியடிப் பிள்ளையார் பொங்கலுக்கு செல்ல பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – பழைய செம்மலையில் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் நாளை  ( ஜூலை 6) முன்னெடுக்கப்படவுள்ளது

இந்த விழாவில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பொங்கல் செய்து பொங்கல் விழா நடத்தப்படவுள்ளது.
இந்த விழாவுக்கு வருகைதரவுள்ள மக்களுக்காக ஐந்து மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்படுள்ளன.

 யாழ்ப்பாணம்  மாவட்டத்திற்கான பேருந்துகளில் ஒன்று தெல்லிப்பளை – துர்க்கை அம்மன் ஆலய வீதியில் இருந்து காலை 6.30 மணிக்கு காங்கேசன்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து சாவகச்சேரி, கொடிகாமம் பேருந்து நிலையங்களில் நின்று முல்லைத்தீவிற்கு செல்லும்.

அதேவேளை, மற்றுமொரு பேருந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று அங்கிருந்து பருத்தித்துறை வீதியூடாக நெல்லியடி, கொடிகாமம் சென்று புதுக்காடு சந்தி வழியாக முல்லைத்தீவுக்கு செல்கிறது. (தொடர்பு: ராஜஸ்ரீ – 0772124654 மற்றும் நெல்லியடி, பருத்தித்துறை மக்களிற்கு: மகிந்தன் – 0777110955.)

திருகோணமலை – சிவன்கோவிலடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நிலாவெளி, திரியாய் ஊடாக முல்லைத்தீவுக்கு செல்லும். (தொடர்பு: விவேகானந்தன் – 0773770215.)

வவுனியா – பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு முல்லைத்தீவுக்கு செல்கின்றது. (தொடர்பு: பிரணவன் – 0776084108.)

மன்னார் – வண்ணாங்குளம் பகுதியில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு திருக்கேதீஸ்வரம் சந்தியூடாக ஏ-32 சாலை சென்று மாங்குளம் ஊடாக முல்லையை சென்றடையும். (தொடர்பு: தீபன் – 0770771236.)

கிளிநொச்சி – டிப்போச் சந்தியில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பரந்தன், விசுவமடு, தேவிபுரம் ஊடாக புதுக்குடியிருப்பு சென்று முல்லைக்கு பயணிக்கும். (தொடர்பு: துஷாந்த் – 0772479023.)

பின்னணி


தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் நாளை  (06) ஆலயத்தில் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்றைய தினம், சிங்கள பௌத்த மயமாக்கலினால் பறிபோய்கொண்டிருக்கும் எல்லைக் கிராமமான கொக்குத் தொடுவாயின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் “108” பானைப் பொங்கலும் இடம்பெறவுள்ளது.

மடப்பண்டமெடுப்பின் போது அவ்வாலயம் சார்ந்த மக்களும் அதன்பின்னர் இடம்பெறும் பொங்கலின் போது காலை 10.30 மணிக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மக்கள் பலத்தை காண்பிக்கும் வகையில் இளையோர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்ப் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டோரை மதங்களை கடந்து நில ஆக்கிரமிப்புக்கு எதிரான உணர்வுள்ள தமிழர்களாய் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தத் தமிழர் திருவிழாவான “108” பானைப் பொங்கல் விழாவினை ஆலய அறங்காவலர் குழுவுடன் இணைந்து சமூக வலைத்தள நண்பர்கள் ஒழுங்கமைத்து முன்னெடுக்கவுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்