தேசிய கிக்பொக்சிங் சம்பியன் பட்டத்தை வென்ற வவுனியா மாணவன்!!📷

தேசியமட்ட கிக் பொக்சிங் குத்து சண்டை போட்டியில் மிக குறைந்த வயதில் போட்டியிட்டு வவுனியா கோவில்குளம் இந்து கல்லுாா் மாணவன் ஆா்.கே.மைக்கல் நிம்றொத் 2019ம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை வென்றுள்ளான்.

அம்பாறையில் யூன் 28, 29, 30 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் ஏழு வயதுக்குட்பட்ட 15 இலிருந்து 20 கிலோ கிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி

தங்கப்பதக்கத்தை சுவீகரித்து வடக்கு மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டையில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை ஆர்.கே. மைக்கல் நிம்றொத் தனதாக்கி கொண்டுள்ளார்.

இதன் மூலம் வடமாகாணத்திற்கும் அவர் கல்விபயிலும் பாடசாலைக்கும், பயிற்றுனருக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய மற்றும் சர்வதேச குத்துச்சண்டை பயிற்றுனர்

மற்றும் இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor