கணித பாடம் படிக்கவில்லை என சிறுநீர் பருக்கிய தந்தை – இரத்தினபுரியில் கொடூரம்.

தனது எட்டு வய­தான மகளை கொடூ­ர­மான முறையில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கி­ய வழக்கில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட தந்தைக்கு 15 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதித்து இரத்­தி­ன­புரி மேல் நீதி­மன்ற நீதி­பதி தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 3 இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு செலுத்­து­மாறும் நீதி­பதி பிர­தி­வா­திக்கு உத்­த­ர­விட்டார்.

இரத்­தி­ன­புரி, கரங்­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர், 2015 நவம்பர் 6ம் திகதி தனது மகளைக் கொடூ­ர­மா­க சித்­தி­ர­வதை செய்­துள்­ள­தாக இரத்­தி­ன­புரி மேல் நீதி­மன்றில் குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டது.

இரவு 10 மணி­ய­ளவில், பிர­தி­வா­தி­யான தந்தை, தனது மக­ளுக்கு கணித பாடத்தை கற்­பித்­துள்ளார். அதன்­போது, கணித பாடத்தில் அவர் மிகவும் பல­வீ­ன­மாக உள்­ள­தாக தெரி­வித்து, மகளை அவர் கொடூ­ர­மாக தாக்­கி­யுள்­ளார். தாக்­கு­த­லுக்கு இலக்­கான சிறுமி பயத்தில் அவ்­வி­டத்­தி­லேயே சிறுநீர் கழித்­துள்ளார்.

சிறுநீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்த தந்தை, அதை மகளிற்கு பருக்கியுள்ளார். பின்னர், அவரது தலையிலும் சிறுநீரை ஊற்றி ஊற்றி சித்­தி­ர­வதை செய்­துள்­ளார். பின்னர் சிறு­மியை நீராட்டி வீட்­டுக்குள் அழைத்­து ­வந்­துள்­ளார்.

சிறு­மியின் தாய், தந்­தை­யி­ட­மி­ருந்து பிரிந்து குரு­ணாகல் பிர­தே­சத்தில் வேறொரு நப­ருடன் வசித்­து ­வந்­துள்ளார். குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நபரும் வேறொரு பெண்­ணுடன் வசித்­து­ வந்­துள்­ளார். சிறு­மியின் தாய், தந்தை பிரிந்து வேறு திரு­ம­ணங்­களை செய்­து­கொண்­ட­மையால், சிறுமி தனது பாட்­ட­னா­ரின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார்.

வழக்கின் ஆரம்ப விசா­ர­ணை­க­ளின்­போதே, பிர­தி­வாதி குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து, அவரை குற்­ற­வா­ளி­யென தீர்ப்­ப­ளித்து கடந்த முதலாம் திகதி நீதிவான் தண்­டனை விதித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 15 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்