16ஆவது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்த குடியரசுத் தலைவர்

16ஆவது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் இன்று (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் 16ஆவது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இது குறித்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கையளித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சரவை பரிந்துரையை ஏற்று 16ஆவது மக்களவையை கலைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor