Paris-Milan இடையேயான சேவைகள் நிறுத்தம்!!

மிக கடுமையான புயல் நிலவியதை அடுத்து Savoie மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Saint-Michel Valloire நகரில் இடம்பெற்ற மண்சரிவை அடுத்து தண்டவாளம் ஒன்று முற்றாக மூடப்பட்டு சேதம் அடைந்துள்ளது.

Chambéry இல் இருந்து Modane வரையான பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் Paris-Milan நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து அடுத்த சில வாரங்களுக்கு தடைப்படும் என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகள் ஆரம்பித்துள்ள போதும், இதற்கான கால அவகாசம் இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் வரை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக மூன்று TGV சேவைகளும், பிரான்ஸ் -இத்தாலி நாடுகளுக்கான ஒரு சேவையும், உள்ளூர் தொடரூந்து சேவைகளும் தற்போது இரத்துச் செய்யப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor