அரை நிர்வாணமாக நீந்துவதற்கு அனுமதி கோரி பெண்கள் போராட்டம்..!!

Annecy இல் உள்ள மாநகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகம் ஒன்றில் அரை நிர்வாணமாக குளிப்பதற்கு அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சமூக வலைத்தளம் ஊடாக இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல பெண்களை குறித்த அமைப்பினர் அழைத்துள்ளனர். சம்பவம் 15 நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது.

Annecy ( Haute-Savoie ) இல் உள்ள மாநகரசபைக்கு சொந்தமான நீச்சல்தடாகத்தில் Céline Saint Julien எனும் பெண் அரை நிர்வாணமாக குளித்துக்கொண்டிருக்கும் போது பாதுகாப்பு அதிகாரிகளால் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்தே இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் அரை நிர்வாணமாக குளிக்கும் போது, எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை?!  என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தவிர, மார்பகம் ஒன்றும் ஆபாச பொருள் இல்லை எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஊடாக அழைக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் பெண்கள் அரை நிர்வாணமாக போராட உள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இதுவரை 330 க்கும் மேற்பட்டவர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.

44 பேர் தாம் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor