பைலட் லைசென்ஸ், சொந்தமாக விமானம் வாங்கிய தமிழ் ஹீரோயின்..!

அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..!

80-90 கால கட்டத்தில் கமல் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்தவர் மாதவி.

பிசியாக இருக்கும் போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார்.

அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை மீண்டும் நடிக்க கேட்டும் தென்னிந்திய சினிமா கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த விமானத்தை ஓட்டுவதற்கு மாதவி பயிற்சி எடுத்து கொண்டு பைலட் லைசென்ஸ்சும் வாங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒற்றை இஞ்சின் விமானம் ஓட்டும் லைசென்ஸ் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மட்டுமே வாங்கியுள்ளார்.

இப்போது நடிகைகளில் மாதவி பைலட் லைசென்ஸ் வாங்கியதோடு சொந்தமாக விமானமும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor