பாடசாலை மாணவா்கள்5போ் படுகொலை செய்த இராணுவத்தினர் விடுதலை!!

திருகோணமலை- நிலாவெளி கடற்கரையில் பாடசாலை மாணவா்கள் 5 போ் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 இராணுவ அதிரடிப்படை சிப்பாய்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

இந்த உத்தரவை திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர்

நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.


Recommended For You

About the Author: Editor