உலர்ந்த கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது!

புத்தளம் மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்திற்குட்பட்ட தில்லையடி ரத்மல்யாய பிரதேசத்தில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர்ந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரும், புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளார் அலுவலக அதிகாரிகளும் இணைந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது குறித்த கடல் அட்டைகளைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலையின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து இரகசியமான முறையில் கொண்டுவரப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 2000 கிலோ கடல் அட்டைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் இவ்வாறு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor