யாழில் சாதனை படைத்த கிரிக்கெட் வீரன் சஞ்சீவன்!!

விக்ரோறியா கல்லூரியின் கிரிக்கெட் அணி வீரன் கோணேஸ்வரன் சஞ்சீவன் பல தசாப்த காலத்தின் பின்னர் சதமடித்து சாதனை நிலைநாட்டியுள்ளார்.

மகாஜன கல்லூரியுடனான UNDER-17 கிரிக்கெற் போட்டியில் அமோகமாக 112 ஓட்டங்களை குவித்து அபாரமாக சதமடித்துள்ளார் சஞ்சீவன்.

தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மைதானத்தில் இன்று (02) இடம்பெற்ற போட்டியில் 9 பௌண்டறிகள், 4 சிக்ஸர்களை அடித்து சஞ்ஜீவன் இந்த சதத்தை பெற்றுள்ளார்.

UNDER-17 பிரிவு போட்டித் தொடரொன்றில் விக்ரோறியாக் கல்லூரி வீரரொருவர் பல தசாப்தங்களின் பின்னர் சதமடித்துள்ளமை கல்லூரிச் சமூகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor