விஷால் இயக்குநரின் புதிய பாய்ச்சல்!

திரு இயக்கும் தெலுங்கு படத்தில் கோபிசந்த் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படம் பற்றிய தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திரு.
விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் திரு. சென்றாண்டு இவரது இயக்கத்தில் வெளியான மிஸ்டர்.

சந்திரமெளலி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரல‌ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், திரு தான் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது முதல் நான்கு படங்களை தமிழில் இயக்கிய திரு, அடுத்த படத்தை தெலுங்கில் இயக்கவுள்ளார்.

சாணக்கியா எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தில் முன்னணி நடிகரான கோபிசந்த் நடிக்கவுள்ளார்.

ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் மெஹ்ரின் பிர்சாதா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் பாலிவுட் நாயகியான ஜரைன் கானும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளாராம்.

பெரும்பான்மையான காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்கிய படக்குழு, 50 சதவீத காட்சிகளை எடுத்து முடித்துள்ளது. தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்ட படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிவருகிறது.

சாணக்கியா படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அமைந்துள்ள படத்தில் ஸ்டண்ட் சில்வா பணியாற்றி வருகிறார்.

ஏ கே என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.


Recommended For You

About the Author: Editor