மாஃபியாவின் டெரர் லுக்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்துக்குப் பின் கார்த்திக் நரேன் அரவிந்த் சாமியை வைத்து இயக்கியுள்ள படம் நரகாசுரன்.

இந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் இவர் தன் மூன்றாவது படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

‘மாஃபியா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் அத்தியாயம் – 1 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, இந்தப் படத்தையும் ஒரே கட்டமாக 35 நாட்களில் முடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

தற்போது அருண் விஜய் பாக்ஸர், சாஹோ மற்றும் அக்னிச் சிறகுகள் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தப் படங்களுக்கு இடையே மாஃபியா படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்


Recommended For You

About the Author: Editor