இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த 52 வயதான தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் தேவகியின் கணவர் குயின்லாந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் கணவரே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் கூறியுள்ளார்கள்.

Springfield Lakes பகுதியில் தனது கணவருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தேவகி வசித்து வந்துள்ளார்.

சமூகத்தொண்டுகளை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கூறப்படும் தேவகி பழகுவதற்கு இனிமையானவர் என்றும் நற்பண்புகள் நிறைந்தவர் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் தம்பதியினராக தென்கிழக்கு ஆசிய நாடொன்றுக்கு விடுமுறை சென்று திரும்பியிருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor