இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

பொலன்னறுவை புதிய நகரத்தில் இந்த நூதனசாலை மற்றும் நூலகம் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் இதுவாகும். இதற்கு 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor