ரிசாத்தின் மனைவியின் வங்கி கணக்கில் பல கோடி ரூபா பணம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி கிதெர் மொஹமட் சஹாப்தீன் ஆயிசாவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதிமோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஐந்து கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி பரிமாற்றம் இடம்பெற்றமை தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறுவதாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதிமோசடி விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு உரிய வங்கி கணக்கிற்கு, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஐந்து கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor