
தொழிலாளர்களின் போராட்ட விடயத்தில் அரசு இறங்கி வரவேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தினை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தம் இன்று 31 ஆவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் Journal du dimanche ஊடகத்திற்காக Ifop நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தது. இதில் 55 வீதமான பிரெஞ்சு மக்கள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கை விடயத்தில் அரசு இறங்கி வரவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
*இந்த கருத்துக்கணிப்பு ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் 1,005 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது.