பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்ட Villejuif தாக்குதல் வழக்கு..!

Villejuif நகரில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகள், பரிஸ் பயங்ங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Villejuif மற்றும் Haÿ-les-Roses (Val-de-Marne) ஆகிய இரு நகரங்களுக்கிடையே இடம்பெற்றிருந்த இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், தாக்குதலாளியும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இதுவரையான விசாரணைகளில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கவில்லை என்பதாலும், எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதாலும் பரிஸ் காவல்துறை தலைமையகமே இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை இந்த வழக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. <<இறுதி நேர விசாரணைகளில், தாக்குதலில் சில மத அடிப்படைவாத செயற்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வழக்கு மாற்றப்பட்டுள்ளது>> என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளி Nathan C. எனும் பெயருடையவர் எனவும், 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் இஸ்லாம் மதத்தை தழுவியிருந்ததும், தாக்குதல் நடத்தும் போது அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor