தேர்தலில் களமிறங்க நான் தயார் – அனுஷா சந்திரசேகரன்!

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சரும் தந்தையுமாகிய அமரர் பெ.சந்திரசேகரனின் 10வது சிரார்த்த தின நிகழ்வுகள் கடந்த 01ம் திகதி தலவாக்கலையில் அனுஷா சந்திரசேகரனின் காரியாலயத்தில் நடைபெற்றது.

சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்கள், அதிபர் ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்

இதன்போது 2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அனுஷா சந்திரசேகரன் கட்டாயம்போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், கட்சி கதவடைப்பு செய்யுமானால் மாற்று தேர்வை நாடுமாறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, தனது தந்தையின் வழியில் கொள்கை மாறாது, மக்களுக்கான அரசியலை நான் முன்னெடுப்பேன் எனவும் கூறிய அனுக்ஷா, தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor