புதையல் தோண்டப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணை!

புத்தளம், வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புபுதுகம பகுதியில் சர்ச்சைக்குரிய தென்னந்தோட்டம் ஒன்றில் புதையல் தோண்டப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வண்ணாத்திவில்லு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று மாலை அவ்விடத்தை பொலிஸார் சோதனையிட்டனர்.

அத்துடன் இன்று குறித்த இடத்தில் தடய நிபுணர்கள் வருகை தந்து ஆய்வினை மேற்கொண்ட நிலையில் புத்தளம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த தோட்டத்தை மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது அங்கிருந்து இரண்டு பாரிய குழிகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அந்தக் குழிகளை தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மண்வெட்டி ஒன்றும் அருகிலுள்ள தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டது.

கடந்த வருடம் வண்ணாத்திவில்லு பிரதேசத்திலுள்ள புபுதுகம பகுதியில் சர்சையை ஏற்படுத்திய ‘டெட்டோ’ என்னும் தென்னந்தோட்டத்திலேயே இந்த புதையல் தோண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor