
கடந்த வெள்ளிக்கிழமை காலை ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வை.12 ரக விமானம் குறித்து ஆய்வு செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தின் பெறுமதி 3 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. சீன ஹேபிங் நிறுவனம் தயாரிப்பான இந்த விமானத்தில் 15 பேர் பயணிக்க முடியும்.
இந்த விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியதற்கான காரணத்தைக் கண்டறியவே இக்குழு இங்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2002 ஆம் ஆண்டும் வை.8 ரக விமானமொன்று தொடங்கொடயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் விமானப்படை அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.