
வவுனியா – ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சோதனை நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய கண்டி நெடுஞ்சாலை ஊடாக செல்லும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் உட்பட தனியார் வாகனங்களை மறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் பொதிகள் சோதனை கூடத்தில் பயணிகளின் பொதிகளை ஸ்கானர் இயந்திரம் ஊடாக சோதனைக்கு உட்படுத்தினர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.