கோட்டாபயாவால் அரசியல் அந்தஸ்து கோரும் தூதர்கள்!

இலங்கை பிரதமர் கோட்டாபயவிற்கு பயந்து சிங்களவர்கள் மேற்குலகில் அரசியல் அந்தஸ்து கோரும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நட்புக்காக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 14 பேருடைய பதவிக் காலத்தை இந்த புதிய அரசாங்கம் நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளது.

இவர்களில் இருவர், தூதுவர்களாக இருந்த அந்நாடுகளிலேயே அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

பதவிக் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர், இதுவரையில் நாடு திரும்பாத இலங்கையின் தூதுவர்களுக்கு நாடு திரும்ப அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையிலேயே, இரு தூதுவர்கள் மாத்திரம் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். தாங்கள் நாடு திரும்பினால், தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக, இந்த அரசியல் புகலிடத்துக்கு அவர்கள் காரணம் கூறியுள்ளதாகவும் இன்றைய சகோதர வார இதழொன்று அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor