இலங்கை வீதி வரைபடத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!!

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, புதுப்பிக்கப்பட்ட சாலை வரைபடத்தின் வடிவமைப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய சாலை வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் சாலை வரைபடம் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor