மலையாளத்தில் திரில்லர் படத்தில் நடிக்கும் த்ரிஷா!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, அடுத்ததாக மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்கிற படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

“த்ரிஷ்யம்”, தம்பி படம் போல இந்த படமும் திரில்லர் பாணியிலேயே அதே சமயம் மாறுபட்ட கதை அம்சத்துடன் இந்த திரைப்படம் உருவாகிறதாம். இந்த படத்தில் திரிஷா, வைத்தியராக நடிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor