ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி!

நாட்டின் கலாச்சார தளங்களை குறிவைக்கும் எந்தவொரு முடிவும் “போர்க்குற்றம்” என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஜரிஃப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் சுமார் 52 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் எச்ச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மொஹமட் ஜவாத் ஜரிஃப், “வெள்ளிக்கிழமை கோழைத்தனமான படுகொலைகளில் உள்நாட்டு சட்டத்தை கடுமையாக மீறியுள்ள ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

கலாச்சார தளங்களை இலக்கு வைப்பது போர்க்குற்றம், மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் இருப்பு முடிவுவை சந்தித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய குடியரசிற்குள் பல இடங்களை தாக்குவதாக அச்சுறுத்தியதை அடுத்து, மோதலைத் தொடங்க வொஷிங்டனுக்கு “தைரியம்” இல்லை என்று ஈரானின் இராணுவத் தலைவர் இன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor