
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருவரையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர். இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் சமர்ப்பணங்களை முன்வைத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க கோரிக்கை விடுத்தனர். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதேபோல, இவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையையும் எதிர்வரும் 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.