கொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர்வெட்டு அறிவிப்பு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அந்தவகையில், 7ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் பின்வரும் பகுதிகளுக்கு நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கலதுவெவ மற்றும் மகரகம இடையேயான நீர்வழங்கல் பகுதிகளின் மஹரகம, போரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பழன்வத்த, மேட்டேகொட, ஹோமகம, மீபே மற்றும் பதுக்க ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர்வெட்டு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரிங்களுக்கு வருந்துவதோடு, போதுமான நீரை சேமித்து வைக்குமாறு குறித்த பகுதி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்