ஆலயத்தில் திருட முயன்றவர் மடக்கி பிடிப்பு.

வட்டுக்கோட்டை துறட்டிப்பனை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் மாவடி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார்.

ஆலயத்தில் உண்டியலில் காசு தி்ருட்டு மற்றும் உடமைகள் திருட்டு என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் ஆலய அறங்காவலரின் மகனின் ஏற்பாட்டில் மாவடி இளைஞர்கள் ஆலயத்தில் கடந்த இரண்டு நாள்களாக காவலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று இரவு ஆலயத்தை உடத்து திருட்டில் ஈடுபட முற்பட்ட சங்கானையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவடி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார்.

திருட்டு நபர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்