கொழும்பு நைட் கிளப்பில் மனித மாமிசம் விற்பனை என வதந்தி

கொழும்பில் இயங்கும் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் மனித மாமிசம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கனடாவின், ஒட்டாவாவில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவிதமாக இலங்கை, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ட்ரினிடாட் அன்ட் டுபாகோ ஆகிய நாடுகளின் இரவுநேர கேளிக்கை விடுதிகளில்

மனித மாமிசம் விற்பனை செய்யப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது. எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும்

ஒரே செய்தி சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு நாடுகள், இடங்கள் மாற்றம் செய்யப்பட்டு போலியாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் சிலவற்றிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயம் தொடர்பிலான செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்