மூட்டுவலித் தைலத்தைப் பருகிய பாலகன் உயிரிழப்பு

கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயதுப் பலாகன் உயிரிழந்த சம்பவம் கிராமமே சோகமயமானது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை முதலாம் திகதி மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்தநிலையில் பாலகன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்காமல்  வெள்ளிக்கிழமை(3) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹரிகரன் துசேன் என்ற ஒரு வயதும் 8 மாதங்களும் நிரம்பிய பாலகனே இவ்வாறு உயிரிழந்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பாலகனின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடு ஒன்றில் பணி புரிந்து வருகின்றார் . தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்