நவீன பேருந்துகள் இறக்குமதி!!

இலங்கை போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த பேருந்துகள் சுமாா் 750 மில்லியன் ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இந்த தகவலை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தவில்லை எனவும் இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு கருதி இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் கைளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor