ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்த முக்கிய பணிப்புரை!

நாட்டின் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் அரச திணைக்களங்கள் மற்றும் கொழும்பு மாநகரசபையின் ஒத்துழைப்புடன் பொலிஸ் மற்றும் ராணுவத்தின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் கீழ் இம்முறை இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor