போக்குவரத்து அதிகார சபையின் அறிவித்தல்!!

வடக்கு மாகாணத்தில் பாடசாலை சேவைகள் மற்றும் பயணிகள் சேவைகளில் கட்டணம் அறவிட்டு ஈடுபடும் அனைத்து வாகன உரிமையாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பதிவு செய்யுமாறு வீதிப்பயணிகள் போக்குரத்து அதிகார சபையின் தலைவர் க.செவ்வேள் தெரிவித்துள்ளார்.

இப்பதிவுகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை அதிகாரசபையின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளிலும் அல்லது வடமாகாண சபையின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம்- 021 2215966, மன்னார்- 0773124498, முல்லைத்தீவு– 021 2290334, வவுனியா– 0776016161, கிளிநொச்சி– 021 2284920 ஆகிய மாவட்டங்களிலுள்ள கிளைகளின் குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor