மீண்டும் சிறையில் ரூமி முகமட் !!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முகமட் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரூமி முகமட் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக தெரிவித்ததை அடுத்து , நேற்றிரவு அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு இரவு நேர கடமையிலிருந்த வைத்தியர், அவரை பரிசோதித்து விட்டு, மீளவும் சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளார்.

இதேவேளை ரூமி முகமது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தலைவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் அனுமதிக்கப்பட்டால் முறையான பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளர் உத்தரவிட்டிருந்ததாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய வெள்ளைவான் சந்திப்பில் கலந்து கொண்டவர்களிற்கு பணம் வழங்கியதாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முகமட் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor