ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஈராக்கில் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஆதரவாளர்கள் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து இன்று (சனிக்கிழமை) அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், இராணுவ தளபதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்ததால், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் இந்த செய்தி விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிந்ததாக கூறப்பட்டாலும், இதனை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் போதியதாக இல்லை என கூறப்படுகின்றது.

வான்வழி தாக்குதலை நடத்தியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவே நடத்தியதாக மேற்கோள் காட்டி ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானிய இராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், இத்தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான், அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், 3,000 துருப்புக்களை அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்